தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றாலைகளின் காரணமாக இன்று முதல் வரும் இரண்டாம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் 3 மற்றும் 4ம் தேதிகளில் பெரும்பாலான வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காலை நேரங்களில் லேசான பனி மூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி ஆகும், குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 1ஆம் தேதி முதல் மூன்றாம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வடகிழக்கு திசையில் இருந்து 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.