நாடு முழுவதும் பிப்ரவரி 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து இனி இ-பாஸ் தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக பேருந்து சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கிப்போய் இருந்தனர். ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இருந்தாலும் இன்னும் சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் தான் உள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் பிப்ரவரி 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இனி மாநிலங்களுக்குள் அல்லது ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் நீலகிரியில் மட்டுமே இ-பாஸ் முறை அமலில் இருந்து வந்த நிலையில், தற்போது அங்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது.