Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எத்தன தடவ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… சட்ட விரோதமாக விற்பனை… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விட்டனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள நாட்டாமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் அந்த இடத்திற்கு சென்ற கொண்டலாம்பட்டி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகப்படும்படியாக அங்கு நின்று கொண்டிருந்த சுரேஷ் மற்றும் மகேந்திரன் ஆகிய 2 பேரை போலீசார் விசாரித்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இரண்டு பேரும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. அதன் பின் மது விற்பனை செய்த குற்றத்திற்காக 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 10 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து விட்டனர்.

 

Categories

Tech |