Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத அளவு குளிர்…. கடுமையான உறைபனி தாக்கம்… பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வாழ்வு…!!

நீலகிரி மாவட்டத்தில் கடும் உறைபனி நிலவுவதால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் அதிகளவு பனி பொழிவதால் அங்குள்ள விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்காக்களில் உள்ள புல்வெளிகள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல பனியால் மூடப்பட்டுள்ளது. இதனால் நகர் பகுதிகளில் இருப்பதைவிட அடர்ந்த வனப்பகுதிகளில் உறைபனி தாக்கமானது அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் அப்பர் பவானி, அவலாஞ்சி, போர்த்தி மந்து போன்ற பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையானது பூஜ்யம் டிகிரிக்கும் கீழ் சென்றுவிட்டது. இதனால் கடந்த 27ஆம் தேதி அவலாஞ்சியில் -4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அந்தப் பகுதியானது அடர்ந்த வனம் என்பதால் பொதுமக்கள் அங்கு வசிப்பதில்லை. ஆனாலும் அந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள அணைகளில் இருந்து மின் உற்பத்தி செய்யப்படுவதால் அங்கு அமைக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களில் இந்த குளிருக்கு மத்தியிலும் மின் ஊழியர்கள் கடுமையாக வேலை செய்து வருகின்றனர். அதோடு இருசக்கர வாகனங்கள் மற்றும் பிற வாகனங்களில் பயணிப்போர் குளிரை தாங்கும் வண்ணம் கையுறைகளை அணிந்து கொண்டு வாகனத்தில் செல்கின்றனர். அப்பகுதியில் நிலவும் இந்த கடும் குளிரால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |