Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எங்களால எந்த பாதிப்பும் இல்ல… முதல்ல அதை சரி பண்ணுங்க… போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்…!!

20 வருடமாக இயங்கிவரும் ஆட்டோ ஸ்டாண்டை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரியில் உள்ள சென்னை சாலையில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஸ்டாண்ட் இயங்கி வந்துள்ளது. இந்த சாலையில் தற்போது தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து கொண்டிருப்பதால் ஆட்டோ ஸ்டாண்டை மாரியம்மன் கோவில் அருகில் மாற்றி வைக்குமாறு கூறப்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோ ஸ்டாண்டை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதியில் ஆட்டோ ஸ்டாண்ட் இயங்கி வருகிறது என்றும், இந்த ஆட்டோ ஸ்டாண்டால் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் சென்னை சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதற்கு சுமார் 15 நிமிடங்கள் பேருந்து நிற்பதால் மட்டுமே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். எனவே அங்கு வரும் பேருந்துகள் உடனடியாக நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆட்டோ ஸ்டாண்ட் தொடர்ந்து அதே இடத்தில் இயங்க அனுமதி அளிக்குமாறும் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது  சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து, போராட்டத்தை கைவிட்டு ஆட்டோ டிரைவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.

Categories

Tech |