Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சுமை தாங்க முடியல… ரொம்ப தொல்லை பண்றாங்க… எல்.ஐ.சி. முகவர் எடுத்த விபரீத முடிவு…!!

கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததால் மன உளைச்சலில் எல்.ஐ.சி முகவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரியதள்ளபாடி கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்துவருகிறார். இவர் எல்.ஐ.சி முகவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது குடும்ப செலவிற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அவர்களிடம் வாங்கிய பணத்தை போதிய வருமானம் இல்லாததால் சுப்பிரமணியனால் திரும்பிக் கொடுக்க இயலவில்லை.

இந்நிலையில் சுப்பிரமணியனிடம் கடன் கொடுத்தவர்கள் அதனை திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சுப்பிரமணி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |