கடகம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும்.
உங்களின் திறமையையும் மற்றும் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்தி வெற்றி பெறலாம். பணி நிமித்தமான பயணங்கள் காணப்படும். பணியை குறித்த நேரத்திற்கு முன்பே முடிப்பீர்கள். இன்று உங்களின் இனிமையான வார்த்தையை உங்களின் துணையை மகிழ்விக்க செய்கிறது.வெளி இடத்திற்கு சென்று வருவதன் மூலம் ஒருவருக்கு ஒருவர் நன்கு புரிந்து உணர்வீர்கள். நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது தொலைதூரத்தில் இருந்து பணம் வரவு வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். உங்களின் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்களிடத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது. இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 8. அதிர்ஷ்டமான நிறம் ரோஸ் நிறம்.