விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு சிறிது அதிர்ஷ்டம் காணப்படும்.
உங்களின் தந்தை ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். ஆன்மீக யாத்திரை உங்களுக்கு திருப்தியளிக்கும். உங்களின் பணியை விரைந்து முடிக்க புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். உங்களின் திறமையும் நேர்மையும் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். உங்களின் துணையிடம் நட்பான அணுகுமுறையில் அணுகுவது சிறந்தது. இதனால் நல்ல புரிந்துணர்வு காணப்படும். பணவரவு அதிகமாக காணப்படும். உங்களின் சேமிப்பும் கணிசமாக உயரும். உங்களிடம் காணப்படும் உறுதி காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு கேளிக்கையில் மனம் ஈடுபடத் தூண்டும். கெட்ட சகவாசங்களை அறிந்து தவிர்த்துவிடுவது நல்லது. நீங்க பைரவர் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும். அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண்: 1. அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.