தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மது மற்றும் புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றத்திற்காக 63 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அதன் படி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் 40 பேரை கைது செய்துள்ளனர்.
அதோடு அவர்களிடமிருந்த 302 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து விட்டனர். இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக 23 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்துவிட்டனர். மேலும் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.