தயிரில் உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிடும் போது என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.
தயிரில் உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது. இது குடல் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதனால் ஒட்டு மொத்த ஆரோக்கியமும் மேம்படுகிறது. தயிர் மற்றும் உலர்ந்த திராட்சை இரண்டையும் சேர்த்து எடுக்கும் போது அதிக நன்மைகள் கிடைக்கிறது. தயிரில் ப்ரோபயாடிக் நார்ச்சத்து உடையது எனவே உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. காரமான உணவை உட்கொள்வதன் காரணமாக உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுகிறது.
ஈறுகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கு சிறந்தது. இதில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளதால் எலும்புகள் வலுப் படுத்தவும் எலும்பு அடர்த்தி அதிகரிக்கும் உதவுகிறது. கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதற்கும், உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும், எடையை குறைப்பதற்கும் தயிர் நன்மை பயக்கிறது. மலச்சிக்கல் பிரச்சினை உடையவர்களுக்கு உலர்திராட்சையுடன் தயிர் சாப்பிடுவதால் அதிக நன்மை கிடைக்கிறது.