Categories
லைப் ஸ்டைல்

பொடுகு தொல்லையா…? வேப்பிலையை இப்படி பயன்படுத்துங்க…!!

பொடுகு தொல்லையிலிருந்து விடுபடுவதற்கு வேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

வேப்பிலை நம்முடைய உடலுக்கு ஆரோக்கியம் தருவதுடன் பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த நிவாரணியாகவும் இருக்கிறது.

வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் இது பொடுகை சரி செய்ய உதவுவதோடு, கூந்தல் சம்பந்தமான பிரச்சினைகளையும் போக்கும்.

இதற்கு வாரத்தில் 2 முதல் 3 முறை ஒரு கையளவு வேப்பிலையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆற வைத்து பின்னர் அந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும். இதனால் விரைவில் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம்.

Categories

Tech |