Categories
தேசிய செய்திகள்

“கர்நாடக தனியார் பள்ளி மாணவர்களுக்கு” ….. வெளியான அசத்தல் அறிவிப்பு…!!

கர்நாடக அரசு ஒரு முடிவை அறிவித்து, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்ததுள்ளது.

இந்த ஆண்டு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மாணவர்கள் பயிலவில்லை. ஆகவே பள்ளிகளுக்கு வாகனச் செலவு, கட்டிடத்தைப் பராமரிப்பு செலவு போன்றவை இல்லை. இருந்தாலும் ஆன்லைனில் வகுப்புகளை நடத்துவதால் மொபைல் போன், இணையதள சேவை என பெற்றோருக்குக் கூடுதல் பணம் செலவாகிறது. ஆனால் பள்ளிகள் முழு கட்டணத்தையும் வசூலிக்கின்றனர்.

தவணை முறையில் கேட்டாலும் முழு கட்டணத்தை நாங்கள் தானே செலுத்தியாக வேண்டும், இந்தக் காலகட்டத்தில் அது பெரிய சுமையாக இருக்கிறது  என்று பெற்றோர்கள் வேதனை தெரிவித்தார்கள். இந்த நிலையில்தான் அமைச்சர் சுரேஷ் குமார் நேற்று ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் டியூசன் கட்டணத்தில் 70 சதவீதம் மட்டுமே பெற வேண்டும். 30% தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ, மாநில பாடத் திட்டம் உள்ளிட்ட எந்தப் பாடத்திட்டத்தைக் கற்றுக்கொடுக்கும் பள்ளியாக இருந்தாலும் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். மேம்பாட்டுக் கட்டணம், டொனேஷன், பள்ளி வாகன செலவு, கல்வியை தாண்டிய விஷயங்களுக்காக வாங்கப்படும் கட்டணங்கள், உள்ளிட்ட எதையும் 2020-21ம் கல்வி ஆண்டில் பள்ளிகள் பெறக் கூடாது என்று அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, ஏற்கனவே மாணவர்களின் பெற்றோர் முழு தொகையையும் செலுத்தி விட்டால், எஞ்சிய தொகையைப் பள்ளி நிர்வாகங்கள் பெற்றோர்களுக்குத் திருப்பி வழங்க வேண்டும்.

அல்லது வரும் கல்வியாண்டில் இதைக் கழித்துக்கொண்டு குறைவான கட்டணத்தைப் பெற வேண்டும் என்று சுரேஷ்குமார் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். முதல்வர் எடியூரப்பாவிடம் ஆலோசனை செய்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |