Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

போன் பேசிட்டே இருக்காத… மகளை கண்டித்த தாய்… விரக்தியில் மாணவி எடுத்த விபரீத முடிவு…!!

செல்போன் அடிக்கடி உபயோகிப்பதை தாய் கண்டித்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முத்தூரில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அனுப்பிரியா என்ற மகள் இருக்கிறார். இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது ஊரடங்கு காலம் என்பதால் அனுப்பிரியா ஆன்லைன் மூலம் படித்து வந்துள்ளார். மேலும் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததால் அவரது தாய் கவிதை அனுப்பிரியாவை கண்டித்திருக்கிறார். இந்நிலையில் அவரது தோட்டத்தில் மாடு மேய்ந்ததை கவனிக்காமல் அனுபிரியா செல்போனில் படம் பார்த்து கொண்டிருந்திருக்கிறார். அதன் பின் அவரது தாய் கவிதை மீண்டும் செல்போன் உபயோகப்படுத்துவதற்காக கடுமையாக திட்டியுள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த அனுப்பிரியா தனது வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயக்க நிலையில் இருந்த அனுபிரியாவை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைஅளிக்கப்பட்ட பின் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பிரியா கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கிணத்துக்கடவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |