Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

என் ஆட்டோவில் ஏற மாட்டியா…? மாணவிக்கு கொலை மிரட்டல்… கடலூரில் பரபரப்பு…!!

மாணவியை ஆபாசமாக திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சங்கர நாயுடு தெருவில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு தனியார் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த மாணவி கடலூர் பேருந்து நிலையத்திற்கு அருகிலிருக்கும் நாகம்மன் கோவில் பக்கத்தில் நின்று கொண்டிருந்தபோது, அந்த இடத்திற்கு ஆட்டோவில் வந்த கடலூர் மாவட்டத்திலுள்ள வண்டிப்பாளையம் பகுதியில் வசித்து வரும் பிரபாகர் என்பவர் மாணவியிடம் தனது ஆட்டோவில் ஏற மாட்டியா என்று சண்டை போட்டுள்ளார்.

அப்போது மாணவியை ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியதோடு மட்டுமில்லாமல், கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக பிரபாகரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |