ஆந்திராவில் இருந்து அரசு பேருந்தில் 10 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து விட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனை சாவடி இயங்கி வருகிறது. அங்கு கவரைபேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை மாவட்டத்தை நோக்கி ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து வந்த தமிழக அரசு பேருந்தை போலீசார் நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அந்த சமயம் பேருந்தில் இருந்த இரண்டு பைகளை போலீசார் சோதனை செய்தனர்.
அதில் 4 பெரிய பாக்கெட்டுகளில் மொத்தம் 10 கிலோ எடை கொண்ட கஞ்சா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து சென்னை மாவட்டம் காவாங்கரை பகுதியில் வசித்து வரும் ரமேஷ் என்பவரையும், வியாசர்பாடி பகுதியில் வசித்து வரும் செல்வதாஸ் என்பவரையும், ஆவடியில் வசித்து வரும் ரமேஷ் என்பவரையும் போலீசார் கஞ்சா கடத்திய குற்றத்திற்காக கைது செய்து, அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விட்டனர்.