மியான்மர் நாட்டில் ஓர் ஆண்டுக்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி தொடங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலையில் அந்த நாட்டினுடைய முக்கிய ஜனநாயக தலைவர்கள் மட்டுமல்லாமல் பிரதமர் அந்தஸ்தில் இருக்கக்கூடிய ஆங் சான் சூச்சி உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அந்த தகவலை அந்த கட்சியினுடைய செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இந்த நிலையில் தற்போது அந்த நாட்டின் ராணுவ ஆட்சி தொடங்கியிருப்பதை அந்நாட்டின் ராணுவ செய்தி தொடர்பாளர் தொலைக்காட்சியில் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அந்த நாட்டில் ஓராண்டுக்கு அவசர நிலை பிரகடனப் படுத்தப் பட்டு வருவதாகவும், அனைத்து சட்டங்களும் ராணுவத்தின் கை தருவதாகவும், அனைத்து அதிகாரங்களையும் இராணுவமே இனிமே செயல்படுத்தும் என்று தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலமாக மீண்டும் ராணுவ ஆட்சியின் கீழ் மியான்மர் வந்துள்ளது. 2011 வரை தொடர்ச்சியாக ராணுவ ஆட்சியின் கீழ் இருந்த மியான்மர் தற்போது 9 ஆண்டுகளுக்கு மீண்டும் ராணுவஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மிக முக்கியமான தேர்தல் நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு நடந்த இரண்டாவது மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியானது வெற்றி பெற்றது.
ஆனால் இந்த தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக ராணுவ தளபதி தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வந்தார். இந்தத் தேர்தலானது முறைகேடுகள் மூலமாக ஆளுங்கட்சி வெற்றி பெற்றது என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். இப்படி ஒரு தருணத்தில் தான் தற்போது அங்கு ஓராண்டுக்கு ராணுவ ஆட்சியின் கீழ் எமர்ஜென்சி அவசர அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.