ராஜஸ்தானில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் எட்டாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் சில மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இதனை போலவே பிப்ரவரி 8ஆம் தேதி முதல் தமிழகத்தில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மற்ற மாநிலங்களையும் சிந்திக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் மீண்டும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும்.