இன்று முதல் EMV அல்லாத ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க முடியாது என்று பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக வங்கி மோசடி அதிகரித்து வருகின்றன. எனவே பயனாளர்களின் தங்களுடைய பணம் பாதுகாப்பு குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்காரணமாக வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணத்தை எடுக்கும் விதிமுறையை மாற்றி அமைத்துள்ளது. இதன்படி ஏடிஎம் கார்டுகளை காந்ததுண்டு மூலமாக படிக்கும் இயந்திரங்களில் இருந்து இனி பணத்தை யாராலும் எடுக்க முடியாது. EMV எனப்படும் இயந்திரங்கள் அட்டைகளை உள்ளிழுத்து சில நிமிடங்கள் அதை உள்ளே பிடித்து வைத்திருக்கும்.
இந்த இயந்திரங்களில் மட்டும்தான் இனி பணத்தை எடுக்க முடியும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற பிரச்சினைகளை சமாளிப்பதற்காக டிஜிட்டல் முறையை பரிந்துரைக்கிறது. PNBone பயன்பாட்டின் மூலமாக பயனாளர்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பான முறையில் பரிவர்த்தனை செய்யுமாறு பஞ்சாப் நேஷனல் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.