ஜனவரியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நிவர் மற்றும் புரெவி புயலால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்கனவே நிவாரணம் அறிவிக்கப்பட்.து இதையடுத்து ஜனவரி மாதம் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும் ஜனவரியில் மழையால் பாதிக்கப்பட்ட 6.81 லட்சம் ஹெக்டர் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 11 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் நிதி உதவியை எதிர்நோக்கி விவசாயிகளுக்கு ரூ.1,116 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெக்டர் ஒன்றுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.10,500 லிருந்து 20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பல்லாண்டு பயிர்களுக்கு ஒன்றுக்கு 18 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2 ஹெக்டேர் பயிர்களுக்கு மட்டுமே நிவாரணம் எனும் உச்சவரம்பு தளர்த்தப்பட்டு அனைத்திற்கும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.