Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் தொடரும் அட்டூழியம்…. எஸ்ஐ மீது மினி லாரி ஏற்றி கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

குடிபோதையில் நபர் ஒருவர் உதவி காவல் ஆய்வாளரை மினி லாரி ஏற்றி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட முடிவைத்தானேந்தல் பகுதியை சேர்ந்த காவலர் பாலு. இவர் ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் உதவி ஆய்வாளர் பாலு ஆத்தூர் பகுதியில் சிலர் குடித்துவிட்டு போதையில் தகராறு செய்து கொண்டிருந்துள்ளனர் . இதையடுத்து பாலு தகராறில் ஈடுபட்டவர்களை கண்டித்து அங்கிருந்து போகுமாறு கூறியுள்ளார். அப்போது கொற்கையை சேர்ந்த முருகவேலு என்பவர் ஆத்திரத்தில் ஆட்டோ எனபடும் மினி லாரியை ஏற்றி கொலை செய்துள்ளார்.

இதையடுத்து உதவி ஆய்வாளர் பாலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிளந்துள்ளார். இந்நிலையில் காவலரை கொலை செய்த குடிகாரர் முருகவேலுவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பது வழக்கமாகி வருகிறது. சமீபத்தில் பண்டாரவிலையை சேர்ந்த காவலர் ஒருவர் ரவுடியால் குண்டு வீசி கொலை செய்த சம்பவம் நடந்தது. இதையடுத்து இந்த சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |