4 பதவிகளுக்கான தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின் வாக்கு பதிவு இன்று நடைபெறுகின்றது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் நடைபெறுகின்றது. இதில் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , பாக்யராஜ் , ஐசரி கணேஷ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றது. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் மொத்தம் 3,644 பேர் உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 3,171 பேர் ஓட்டளிக்க தகுதி உடையவர்கள்.இதில் தலைவர் , பொதுச்செயலாளர் , பொருளாளர் , துணைத்தலைவர் ஆகிய பொறுப்புகளுக்கு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசர் , பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால் , பொருளாளர் பதவிக்கு கார்த்தி , துணை தலைவர் பதவிகளுக்கு பதவிக்கு கருணாஸ் , பூச்சி முருகன் போட்டியிடுகின்றனர். அதே போல சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு கே. பாக்யராஜ் , பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் , பொருளாளர் பதவிக்கு பிரசாந்த் , துணை தலைவர் பதவிகளுக்கு பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.