Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பேருந்து மீது ஆம்னி வேன் மோதி…. 6 பேர் பரிதாப பலி… சேலத்தில் சோகம்…!!

நின்றுகொண்டிருந்த பேருந்து மீது ஆம்னி வேன் மோதி 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பட்டணம் என்ற இடத்தில் சாலையோரம் அரசு பேருந்து ஒன்று நின்றுகொண்டிருந்துள்ளது.  அப்போது ஈரோடு மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி இளைஞர்கள் சுற்றுலா சென்ற ஆம்னி கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்துள்ளது. அப்போது சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த பேருந்தின் மீது எதிர்பாராதவிதமாக அந்த ஆம்னி கார் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் ஆம்னி காரில் பயணித்த 5 பேர் மற்றும் பேருந்தில் இருந்த ஒருவர் என்று மொத்தம் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |