2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்து பேசி வருகின்றார். அப்போது, ரவீந்திர நாத் தாகூரின் கவிதை வரிகளைச் சுட்டிக்காட்டி, நிர்மலா சீதாராமன் பேச தொடங்கினார். இந்த மத்திய நிதி நிலை அறிக்கை 2021-22 பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் நிச்சயம் இருக்கும்.
இன்று நமது இந்திய 2 தடுப்பூசிகளை தயாரித்து முன்னொடியாகத் திகழ்கிறது. இதுவரை இல்லாத நோய்த்தொற்று காலத்தில் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். பொது முடக்கத்தால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் கூறினார். ரூ.35,000 கோடி கொரோனா தடுப்பூசிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் பேசினார்.