Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரூ.1,03,000,00,00,000…! தமிழகத்துக்கு ஒதுக்கீடு…! அள்ளிக்கொடுத்த மத்திய அரசு …!!

பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு முயற்சி.  27.1 லட்சம் கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மூன்று ஆத்ம நிர்பர் பாரத் தொகுப்பு அறிவிக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி கிடைக்க பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கு நன்றி.

பெரும் தொற்று ஏற்படும் என நாம் கற்பனை செய்து பார்க்கவில்லை. நடப்பாண்டிற்கான பட்ஜெட், 6 முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மத்திய அரசு மே மாதத்தில் ‘ஆத்ம நிர்பர் பாரத்’ தொகுப்பை அறிவித்தது. ‘ஆத்ம நிர்பர் பாரத் திட்டம்’ 130 கோடி இந்தியர்களுடைய நம்பிக்கையின் வெளிப்பாடு.

நாட்டில் போக்குவரத்துத்துறையில் 7 ஆயிரம் கோடி சொத்துக்கள் உள்ளன. விமான போக்குவரத்துத்துறை, ரயில்வே துறை ஆகியவற்றில் தேவைப்படும் எரிபொருள்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு உண்டு. தமிழகத்தில் ரூ.1.03 லட்சம் கோடி செலவில் 3,500 கி.மீ தொலைவில் சாலைகள் அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Categories

Tech |