Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

அடடே..! இவ்வளவு திட்டங்களா ? கலக்கிய மத்திய அரசு…! பட்ஜெட் வேற லெவல் அறிவிப்பு …!!

 

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது, சுகாதாரம் குறித்து தான் நாம் முதலில் பேசப் போகிறோம். பெருமளவில் நாம் சுகாதாரத்துறை குறித்து கவனம் கொடுத்துள்ளோம். அதில் மூன்று முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்த போகிறோம். ஆத்ம நிர்மன் யோஜன என்ற திட்டம் கொண்டு வரப்போகிறது. அந்த திட்டம் சுமார் 64 கோடி அளவில் செயல்படுத்த போகிறது. இதன் மூலம் முதல்நிலை தொடங்கி சிறு அளவிலான சுகாதார நிலையங்களை ஏற்படுத்த இந்த நிதி உதவும். இதன்மூலம் சுமார் 17,000 கிராம அளவிலான சுகாதார நிலையங்கள் 11,000 நகர்ப்புற சுகாதார அமைப்புகளுக்கு உதவிகள் வழங்கப்படும்.

மேலும் இது 11 மாநிலங்களில் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம் 602 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். இதேபோல இந்த திட்டத்தின் மூலம் சுகாதார மையங்கள் பல இடங்களில் நிறுவப்பட உள்ளன. ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள சுகாதார மையங்களும் பலப்படுத்தப்படும். உலக சுகாதார மையத்தின் தனிப்பட்ட அலுவலகம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. வைராலஜி தொடர்பாக தேசிய அளவிலான ஆய்வுகள் மேற்கொள்ள 4 மையங்கள் உருவாக்கப்பட உள்ளன.

ஊட்டச்சத்து தொடர்பான முக்கிய பகுதி பற்றி பேசப்போகிறோம். 112 மாவட்டங்களில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறுதிப்படுத்த இந்த திட்டம் உதவும். உலக சுகாதார மையம் ஒவ்வொரு முறையும் தூய்மையான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை பற்றி அடிக்கடி பேசி வருகிறார்கள்.  அவற்றுற்கு முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்தி வருகிறார்கள். 2.86 கோடி நகர்புற வீடுகளுக்கு தூய்மையான குடிநீர் கிடைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக 2 லட்சத்து 87 கோடி செலவிட உள்ளோம்.

கழிவுகளை கையாள்வது மிக மிக முக்கியமான ஒன்று. அதற்காக சுவச் பாரத் திட்டம் நாம் செயல்படுத்தப் போகிறோம். இதன் மூலமாக கழிவுகள் தேங்குவதை குறைக்கிறோம். அதேபோன்று தேங்கிய கழிவுகளை சுத்தம் செய்வதற்கான திட்டங்களையும் நாம் வகுக்கிறோம். இதற்காக ஒரு லட்சத்து 41 கோடி உட்பட்ட நிதியை ஒதுக்க போகிறோம். 42 நகர்ப்புற மையங்களில் காற்று மாசுபடுதலை தவிர்ப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். பழைய மற்றும் செயல்பாட்டில் இல்லாத வாகனங்கள் மூலமாக ஏற்படுத்தப்படும் மாசுபாடு குறைப்பதற்காக புதிய திட்டம் ஒன்றை கொண்டு வருகிறோம். தனியார் வாகனமாக தனிப்பட்ட நபரின் வாகனமாக இருந்தால் 20 வருடங்கள் கழித்து கிராப் ஆக கருதப்படவேண்டும். அதேபோன்று கமர்சியல் தொடர்பான வேலைகளில் ஈடுபடுத்தப்படும் வாகனங்கள் 15 ஆண்டுகளில் ஸ்கிராப் ஆக கருதப்பட வேண்டும்.

50,000 குழந்தைகளின் மரணங்களை குறைப்பதற்கான திட்டம் கொண்டுவர இருக்கிறோம். தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்கான திட்டங்களை நாம் இதில் பேசப் போகிறோம். நம் உற்பத்தித் துறை என்பது இரட்டிப்பான வளர்ச்சியை எட்ட வேண்டும். நம் நாட்டில் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் உலக அளவில் வளர்ச்சியை எட்டுவதற்கான திட்டங்களை நாம் செயல்படுத்த உள்ளோம். உற்பத்தி துறை தொடர்பான பணிகளுக்காக 1.97 கோடியை ஐந்து வருடங்களில் செலவிட இருக்கிறோம்.

அதாவது இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் உலக அளவில் தங்கள் பொருட்களை கொண்டு செல்வதற்கான திட்டங்களை இது உள்ளடக்கியிருக்கும். நம் நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் உலக அளவில் தயாரிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்பதற்கான திட்டம் இது. அடுத்து வரும் மூன்று வருடங்களில் ஏழு டெக்ஸ்டைல் பார்க்குகள் நிறுவப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Categories

Tech |