Categories
தேசிய செய்திகள்

சென்னையில் ரூ.63,246 கோடியில்…. மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம்…!!

பட்ஜெட் தாக்கலில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து அவர் உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார்.

மேலும் இந்த காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் மத்திய அரசுக்கு 140 கோடி மிச்சமாகும். ஊரடங்கை அமல்படுத்தாமல் இருந்திருந்தால் கொரோனாவால் மிகப் பெரும் சேதத்தை சந்தித்திருக்க நேர்ந்திருக்கும். மேலும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. கொரோனா காலத்தில் பணியாற்றிய முன் களப் பணியாளர்களுக்கு நன்றி” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் 27 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். சென்னையில் 119 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.63, 246 கோடியில் மெட்ரோ ரயில் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும். கொச்சி மெட்ரோ ரயில் திட்ட மேம்பாட்டு பணிக்கு மத்திய பட்ஜெட்டில் ரூபாய் ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கீடு. நாட்டிலுள்ள 72% ரயில் பாதையில் மின்மயமாக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள அகல ரயில் பாதைகள் 2023 க்குள் மின்மயமாக்கப்படும்.

Categories

Tech |