Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பெற்றோரின் அலட்சியம்…. குட்டையில் சிறுவர்களின் விளையாட்டு…. எதிர்பாராமல் நேர்ந்த சோகம்….!!

குட்டையில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள மூங்கில் ஊருணியை சார்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மகன் தஸ்வந்த் பிரியன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். ராஜ்குமாரின் பக்கத்து வீட்டில் உள்ளவர் பாரதிராஜா. இவருடைய மகன் பிரஜின் அதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். இருவரும் ஊருக்கு வெளியே உள்ள பண்ணைக்குட்டைக்கு நேற்று முன்தினம் மாலை சென்றுள்ளனர்.

குட்டையை பார்த்த சந்தோஷத்தில் இருவரும் குட்டையில் இறங்கி விளையாடிய போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் இருவரும்  நீருக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் குட்டையில் இருந்து சிறுவர்களை பிணமாக மீட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |