கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்த ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்ள உதவும் வகையில் கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணவர்களுக்கு நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா டேட்டா கார்டு வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று முதல் இத்திட்டத்தினை முதல்வர் தொடங்கிவைக்கிறார். இதன்மூலம், அரசு, அரசு உதவி பெறும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் தினசரி 2 ஜிபி டேடா இலவசமாகக் கிடைக்கும்.