நடிகர் சங்க தேர்தலை தவிர்த்திருக்கலாம் என்று நடிகர் ஆர்யா வாக்களித்த பின் பேட்டியளித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் நடிகர் மற்றும் நடிககைகள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர்.
இன்று காலை நடிகர் ஆர்யா சைக்கிளில் தங்களின் வந்து தந்து வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் , நடிகர் சங்க தேர்தலை தவிர்த்து இருக்கலாம் எனவும் , அனைவரும் ஒற்றுமையாக தான் இருந்தோம். தேர்தல் நேரத்தில் ஒருவரை ஒருவர் குறை சொன்னது வேடிக்கை என்று நடிகர் ஆர்யா பேட்டியளித்தார்.