Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: வட்டிசலுகை – மத்திய பட்ஜெட்டில் செம அறிவிப்பு…!!

ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்ட வீட்டுக் கடன் வட்டி சலுகையை (2022 வரை) நீட்டித்து பட்ஜெட்டில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் 2021-2022 க்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார். இதையடுத்து ஒவ்வொரு பட்ஜெட் குறித்த அறிவிப்பை வாசித்து வருகிறார்.

அதில் சற்றுமுன், ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்ட வீட்டுக் கடன் வட்டி சலுகையை (2022 வரை) நீட்டித்து பட்ஜெட்டில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். குறைந்த விலை வீடுகளை கட்டும் திட்டங்களுக்கு வரிச்சலுகை ஓராண்டு நீட்டிக்கபடும். மேலும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான வரிச்சலுகை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |