ரூ.16.5 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையில் இன்று மத்திய நிதி அமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், எல்.ஐ.சி.பங்குகளில் ஐபிஓ அறிமுகப்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு பங்குகள் விற்கப்படும். இரண்டு பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும். வேளாண்பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நடைமுறை தொடரும். மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக பாடுபடுகிறது.
43 லட்சம் கோதுமை பயிரிடும் விவசாயிகள் பலனடைந்துள்ளனர். குறைந்தபட்ச ஆதார விலை மூலம் 1.4 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர். விவசாயிகள் 1.5 மடங்கு கூடுதல் வருவாய் பெறுவதை குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்யும். தானிய கொள்முதல் மூலம் ஒரு ஆண்டில் 1.5 கோடி விவசாயிகள் கூடுதலாகப் பயனடைந்துள்ளனர். ஒரு நாடு ஒரு ரேஷன் மூலம் 32 மாநிலங்களில் 69 கோடி மக்கள் பயன்பெறுகின்றனர். நுண்ணீர் பாசனத்திற்கு ரூ.10ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
சென்னை, கொச்சின் உள்ளிட்ட 5 மீன்பிடித்துறைமுகங்கள் மேம்படுத்தப்படும். ரூ.16.5 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்நோக்கு கடல் பாசி பூங்கா அமைக்கப்படும். நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டம் 2022க்குள் முடிக்கப்படும். நுகர்வோரே மின்நிறுவனங்களை தேர்ந்தெடுக்கும் வசதி அறிமுகம்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டம் 2022க்குள் முடிக்கப்படும். ஏர் இந்தியா, ஐடிபிஐ வங்கி, இந்தியன் ஆயில், ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட தனியார்மயத் திட்டங்கள் அடுத்தாண்டுக்குள் முடிக்கப்படும். காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49%லிருந்து 74%ஆக அதிகரிப்பு என நிதி அமைச்சர் தெரிவித்தார்.