பிரிட்டனில் வாக்கிங் சென்ற இளம் தம்பதியினர் இறந்த குழந்தையின் சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பிரிட்டனில் உள்ள கோல்ப் மைதானத்தில் ஒரு இளம் தம்பதியினர் தங்களது நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஒரு பொருளை கண்டுள்ளனர். அதன் அருகில் சென்று பார்த்தபோது பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்பின் அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த குழந்தையின் உடலை கைப்பற்றினர். மேலும் அந்தக் குழந்தையின் தாயும் தேடி வருகின்றனர். ஆனால் அக்குழந்தையின் சடலத்தை முதலில் கண்ட புதுமண தம்பதியினர் கண்ட காட்சியை நினைத்து அங்கேயே கண் கலங்கி நின்றனர். அதன்பின் போலீசார் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து அனுப்பி வைத்தனர்.