இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.
உலகளவில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் வெற்றியாளர்கள், ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளிட்ட அனைவரும் நோபல் பரிசுக்கான வேட்பாளராக பலரை தேர்வு செய்து வருகின்றனர். அதனடிப்படையில் 2021ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுக்கான நபர்களை பரிந்துரைக்கும் கால அவகாசம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்தது.
அதன்பின் அதன் விபரங்கள் வெளியிடப்பட்டது. அதில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், பருவகால மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கிரேடு துன்பெர்க், ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் விமர்சகர் அலெக்சி நவால்னி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு நோபல் பரிசை வெற்றி பெறும் நபரின் பெயரை வரும் அக்டோபர் மாதம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.