உலகளவில் இந்தியாவில் தான் கார்ப்பரேட் வரி குறைவாக வசூல் செய்யப்படுவதாக பட்ஜெட் உரையில் அமைச்சர் நிதியமைச்சர் தெரிவித்தார்.
மத்திய நிதி அமைச்சர் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். அப்போது, உலகிலேயே கார்ப்பரேட் வரி இந்தியாவில் தான் குறைவாக வசூலிக்கப்படுகிறது. வரி விதிப்பின் முக்கியத்துவத்தை திருக்குறளைச் சுட்டிக்காட்டி விளக்கினார் நிதியமைச்சர். பென்ஷன் மட்டும் பெறும் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய வேண்டியதில்லை. வேளாண்பொருள்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் திட்டத்தில் 1.68 கோடி விவசாயிகள் பதிவு. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கூடுதல் சலுகை வழங்க வழிவகை செய்யப்படும்.
குறைந்த விலை வீடுகளுக்கான வரிச்சலுகை 2022 மார்ச் மாதம் வரை நீடிக்கும். வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வரி தொடர்பான பிரச்னைகளை தீர்க்க புதிய கமிட்டி அமைக்கப்படும். ஜிஎஸ்டி முறையை மேலும் எளிமையாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரிச்சலுகை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு. வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 6.48 கோடியாக அதிகரித்துள்ளது என பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.