பெண் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி கிராமத்தைச் சார்ந்தவர் சௌந்தர்ராஜன்-மங்கையர்கரசி தம்பதியினர். மங்கையர்கரசி கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். மங்கையர்கரசியின் மகனுக்கு வரன் பார்த்து வரும் நிலையில் வரன் ஏதும் சரியாக அமையவில்லை என்பதால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். கடந்த 26ஆம் தேதி அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவர் மயங்கி கிடந்ததை கண்ட குடும்பத்தினர் அவரை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காத காரணத்தினால் மங்கையர்கரசி பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து கீழப்பழுவூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்