Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அம்மா கோவிலுக்கு புறப்பட்ட பெண்கள்…. வழியில் ஏற்பட்ட தடங்கள்…. படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி….!!

மினிவேன் கவிழ்ந்ததில் 25 பெண்களும் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டத்திலுள்ள குன்னத்தூரில் ஜெயலலிதா கோவில் திறப்பு விழா கடந்த 29 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த விழாவுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுகவினர் திரண்டு வந்துள்ளனர். இதில் கலந்து கொள்வதற்காக பூலாம்பட்டி பகுதியில் இருந்து ஒரு மினி வேனில் 25 பெண்கள் தேவன்குறிச்சி பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் நிலைதடுமாறிய மினி வேன் சாலையோரத்தில் கவிழ்ந்துள்ளது. இதில் பயணம் செய்த 25 பெண்களும் படுகாயமடைந்தனர்.

மேலும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த சத்திரம் பட்டியைச் சேர்ந்த ராமன் என்பவரும் காயமடைந்துள்ளார். பின்னர் அவர்கள் அக்கம்பக்கதினரால் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கபட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |