தபால் வாக்குகளை அளிக்க கூடுதல் கால அவகாசம் கொடுத்து இருக்கலாம் என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார் .
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் பல்வேறு திரைக் கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். காலையே வந்து நடிகர் மன்சூர் அலிகான் தனது வாக்கை பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் , தபால் வாக்குகளை அளிக்க கூடுதல் கால அவகாசம் கொடுத்து இருக்கலாம். தண்ணீர் பிரச்சினையை மறைப்பதற்காகவே இதை பெரிதாக்குகிறார்கள். நீதிமன்றம் சொல்லாமல் அவர்களுக்குள் பேசி இருக்கலாம் என்று நடிகர் மன்சூர் அலிகான் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.