Categories
தேசிய செய்திகள்

பட்ஜெட் 2021… “தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைப்பு”…!!

கடந்த நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தங்கத்துக்கான இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனை மீண்டும் 10 சதவீதமாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மேலும், மறைமுக வரிகளில் வழங்கப்பட்டு வரும் 400 விதமான பழைய சலுகைகள் மறு பரிசீலனை செய்யப்படும். பொருளாதாரத்தை சீரமைக்க 80,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும். பிப்ரவரி மாத செலவுகளை பூர்த்தி செய்ய 80,000 கோடி கடன் பெற மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாகவும் அறிவித்தார்.
அதேபோல், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரிச்சலுகை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |