Categories
மதுரை மாவட்ட செய்திகள்

70 சதவீதம் பத்தல…. கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்…. வெளியான முக்கிய தகவல்….!!

தென்மாவட்டங்களில் மதுரை வழியாக கூடுதலாக ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

கொரோனா ஊரடங்கால் ரயில்வே சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக சரக்கு ரயில்கள் மற்றும் பார்சல் ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. தற்போது 70 சதவீத ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தென்மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக கூடுதலாக ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான ஒப்புதலை ரயில்வே வாரியம் அளித்துள்ளது. அந்த ஒப்புதலில் நாகர்கோவில்-தாம்பரம் இடையே தினசரி அந்தியோதயா ரயில் இயக்கப்படுகிறது, கன்னியாகுமரி-ஹவுரா இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது, நெல்லை- ஈரோடு தினசரி ரயில் மற்றும் திருச்செந்தூர்-பாலக்கோடு தினசரி ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் சிறப்பு ரயில்களாக விரைவில் இயக்கப்படும் என தெரிகிறது. மேலும் திருச்செந்தூர்-பாலக்காடு மற்றும் நெல்லை-ஈரோடு பாசஞ்சர் ரயில்கள் 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் இயக்கப்படுவதால் எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்படுமா என்பது குறித்து இன்னும் தகவல் தெரிய வரவில்லை. மேலும் நெல்லை-ஈரோடு பாசஞ்சர் ரயில் மயிலாடுதுறை இணைப்பு ரயிலாக இயக்கப்படுமா என்பது குறித்து இன்னும் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

Categories

Tech |