மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல் மீது லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகளும், டீசல் விலை 4 ரூபாய் வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீது புதிதாக கூடுதல் வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. இது பெட்ரோல் டீசல் மட்டுமல்ல பல்வேறு முக்கிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டு இருக்கிறது. இதில் இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களும் அடக்கம். அதைத்தவிர இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் போன்றவையும் அடக்கம். வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு கூடுதல் வரி பெட்ரோல் மற்றும் டீசல் மீது தற்போது அமல்படுத்தப்பட்டு இருந்தாலும், இதனால் உடனடியாக சில்லரை விலை உயராது என அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் பெட்ரோல் லிட்டருக்கு 2.50 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 4ரூபாய்க்கும் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.