பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியில்லாததால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள நெல்லியாளம் அரசு தேயிலை தோட்டம் பெருங்கரை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களாக கணேசன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் பல இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது நோய் குணமடையவில்லை.
இதனால் மனமுடைந்த கணேசன் தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தேவாலா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.