மகனை குக்கரால் தாக்கி கொலை செய்த தந்தையை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள முல்லை நகரை சேர்ந்தவர் ராமதாஸ்-சந்திரா தம்பதியினர். இவர்களுக்கு பிரவீன் என்ற ஒரு மகன் இருந்தார். பிரவீன் அந்த பகுதியில் இருக்கும் ஒரு பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று ராமதாஸ் குடிபோதையில் வந்து தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது பிரவீன் அதனை தட்டிக் கேட்டுள்ளார்.
தனால் ஆத்திரமடைந்த ராமதாஸ் அவரை உதைத்து கீழே தள்ளியதுடன் கையில் கிடைத்த குக்கரை எடுத்து பிரவீன் தலையில் பலமாக அடித்துள்ளார். இதனால் பிரவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத்தொடர்ந்து ராமதாஸ் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பிரவீனின் தாயான சந்திரா அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் காவல்துறையினர் ராமதாஸ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.