சென்னையில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக இந்தியாவில் எந்தவிதமான சர்வதேசப் போட்டிகளும் நடைபெறாமல் இருந்த சூழலில் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் தொடங்க இருக்கிறது. குறிப்பாக வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி – இங்கிலாந்து அணியும் மோத இருக்கிறார்கள். இந்த போட்டிக்கு அடுத்ததாக பிப்ரவரி 13ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும் திட்டமிடப்பட்டன.
இந்த சூழலில் தமிழக அரசு விளையாட்டு மைதானங்களில் 50% அளவிலான ரசிகர்கள் அனுமதிக்கலாம் என்று அறிவித்திருந்தது. அந்த அடிப்படையில் தற்போது தமிழக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பிசிசிஐ இடம் கோரிக்கை வைத்து. இதனால் ஐம்பது சதவீத அளவிலான ரசிகர்களை 2வது டெஸ்ட் போட்டியில் அனுமதிப்பதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தற்போது திட்டமிட்டிருக்கிறது.
முதல் டெஸ்ட் போட்டிக்கு இன்னும் நான்கு தினங்களில் இருப்பதன் காரணமாக டிக்கெட் விற்பனை செய்வது மற்றும் ரசிகர்களுக்கு ஏற்றவாறு மைதானத்தை தயார் செய்வதில் சிக்கல் ஏற்படும் என்பதால் இரண்டாவது போட்டியை மட்டும் ரசிகர்கள் மைதானத்தில் காண்பதற்கு உள்ளே அனுமதிக்கப் படுவார்கள் என்ற தகவல்களை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தற்போது தெரிவித்திருக்கிறது. இது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.