ராணுவ வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி கிராமத்தைச் சார்ந்தவர் சாம்ராஜ். இவர் ஒரு ராணுவவீரர். இவரது மனைவி சாந்தி கந்திலி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். பொங்கல் விடுமுறைக்காக சாம்ராஜ் திருப்பத்துருக்கு வந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சாம்ராஜ் தனது வீட்டில் தனியாக இருக்கும்போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து சாந்தி திருப்பத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.