இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார்.
மேலும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் மத்திய அரசுக்கு 140 கோடி மிச்சமாகும். பொது முடக்கத்தை அமல்படுத்தாமல் இருந்திருந்தால் கொரோனாவால் மிகப் பெரும் சேதத்தை சந்தித்திருக்க நேர்ந்திருக்கும். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. கொரோனா காலத்தில் பணியாற்றிய முன் களப் பணியாளர்களுக்கு நன்றி” என அவர் தெரிவித்தார். இயதையடுத்து மத்திய பட்ஜெட் ஒவ்வொன்றாக வாசித்தார.
அதில், மேலும் 100 நகரங்களில் எரிவாயு விநியோக குழாய் கட்டமைப்பு திட்டம். மேலும் ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும். கப்பல் துறையில் உலக நிறுவனங்களுடன் இந்திய நிறுவனங்கள் பங்கெடுக்கும் வகையில் புதிய திட்டம். இரண்டு, மூன்றாம் ஆம் நிலை நகர விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படும். பேருந்து வசதிகள் மேம்பாட்டிற்காக ரூபாய் 18 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. காற்று மாசு கட்டுப் படுத்துவதற்காக ரூபாய் 2,217 கோடி நிதி ஒதுக்கீடு.