இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார்.
மேலும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் மத்திய அரசுக்கு 140 கோடி மிச்சமாகும். பொது முடக்கத்தை அமல்படுத்தாமல் இருந்திருந்தால் கொரோனாவால் மிகப் பெரும் சேதத்தை சந்தித்திருக்க நேர்ந்திருக்கும். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. கொரோனா காலத்தில் பணியாற்றிய முன் களப் பணியாளர்களுக்கு நன்றி” என அவர் தெரிவித்துள்ளார். இயதையடுத்து மத்திய பட்ஜெட் ஒவ்வொன்றாக வாசித்தார்.
அதில் நாடு முழுவதும் 750 ஏகலைவன் மாடல் பள்ளிகள் அமைக்கப்படும். எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும். 100 புதிய சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும். 15,000 பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்படும். தேசிய மொழிகளில் மொழி பெயர்க்க புதிய திட்டம் உருவாக்கப்படும். லடாக்கின் லே பகுதியில் புதிய மத்திய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். படித்து முடித்த பிறகு மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க ரூபாய் 30,00 கோடி ஒதுக்கீடு வழங்கப்படும்.