பிரதமர் மோடி வரும் அதே நாளில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தமிழகம் வர இருக்கின்றார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அண்மையில் தமிழகம் வந்த ராகுல் காந்தி கோவை, கரூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் 14, 15, 16 ஆகிய தேதிகளில் தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதே நேரம் சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்து மோடியும் தமிழகம் வர உள்ளார். பிப்ரவரி 14ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர உள்ள நிலையில் ராகுல் காந்தியும் தமிழகம் வருகிறார்.ஜனவரி 14-ல் பாஜக தலைவர் ஜேபி நட்டா வந்த நிலையில் அதேநாளில் ராகுல் காந்தியும் தமிழகம் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.