Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மார்னிங் ஸ்பெஷலாக… குழந்தைகளுக்கு ஏற்ற… இந்த ரெசிபிய செய்து அசத்துங்க..!!

சேமியா பொங்கல் செய்ய தேவையானப் பொருள்கள்:

சேமியா                       – 2 கப்
ரவை                             – 1/2 கப்
பச்சைப் பருப்பு         – 1/2 கப்
மஞ்சள் தூள்              – சிறிது
உப்பு                               – தேவையான அளவு

தாளிக்க:

நெய்                               – 2 டீஸ்பூன்
மிளகு                            – 1 டீஸ்பூன்
சீரகம்                            – 1 டீஸ்பூன்
முந்திரி                        – 10
இஞ்சி                           – ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை        – சிறிதளவு

செய்முறை:   

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, வாணலியானது நன்கு சூடானதும், அதில் பாசி பருப்பையும், சேமியாவையும், ரவையும் போட்டு, தனித்தனியாக பச்சை வாசனை போகும் வரை நன்கு வறுத்து எடுத்து கொள்ளவும். பிறகு இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் வறுத்த பாசி பருப்பை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குழையாதவறு நன்கு வேக  வைத்து, மீதியுள்ள தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.

மேலும் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி சூடானதும், சீரகம், மிளகு,முந்திரி பருப்பு, நறுக்கிய இஞ்சி துண்டுகள், கறிவேப்பிலையை போட்டு நன்கு வேகும் வரை தாளித்து கொள்ளவும்.

அடுத்து தாளித்த கலவையில், வறுத்த சேமியாவையும், ரவையையும் போட்டு, இரண்டே கால் கப் தண்ணீர் ஊற்றி, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட்டு, நன்கு கொதிக்கும் வரை மூடி வைத்து கொள்ளவும்.

பிறகு தண்ணீர் கொதித்து கெட்டியானதும், தேவையான அளவு உப்பு தூவியபின், வேக வைத்த பாசிப் பருப்பை   போட்டு சிறிது நேரம் மூடி வைத்து கொதிக்க விடவும்.

கடைசியில் மறுபடியும் கொதி வைத்த கலவையானது கெட்டியாகி உதிரிவாக வந்தபின் அடியில் பிடிக்காதவாறு நன்கு கிளறிவிட்டதும், அடுப்பிலிருந்து இறக்கி, பரிமாறினால் ருசியான சேமியா பொங்கல் சாப்பிட தயார்.

Categories

Tech |