Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பிள்ளைகளை கவனமா பார்த்துகோங்க…. பெற்றோரின் அலட்சியம்…. 3 வயது சிறுவன் உயிரிழப்பு….!!

தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் மீது சரக்கு ரயில் மோதி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள திருமச்சிபுரத்தைச் சார்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு முன்று வயதில் ருத்ரன் என்ற மகன் இருந்தான். செந்தில்குமாரின் வீட்டின் பின்புறத்தில் ரயில்வே தண்டவாளம் உள்ளது. கடந்த 27ஆம் தேதி ருத்ரன் அந்த ரயில்வே தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அந்த சமயத்தில் கரூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த சரக்கு ரயில் ருத்ரன் மீது மோதியதில் ருத்ரன் தூக்கி வீசப்பட்டான். இதில் ருத்ரன் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

ருத்ரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளனர். இதனை அறிந்த ரயில்வே போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ருத்ரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து கரூர் ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |