தீராத நோயால் அவதிப்பட்டு வந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள அசோகபுரம் கலைமகள் வீதி பகுதியில் சீனிவாசன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில காலமாக நோயினால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் இவருக்கு நோய் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த சீனிவாசன் அப்பகுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஈரோடு கருங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சீனிவாசனின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.